பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பேசி நாட்டை தவறாக வழி நடத்துவதை நிறுத்துங்க மோடி ஜி... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பேசி நாட்டை தவறாக வழி நடத்துவதை நிறுத்துங்கள் மோடி ஜி என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பானிட்டில் ரூ.900 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிப்பு ஆலையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: விரக்தியின் உச்சத்தில் உள்ள சிலர் (காங்கிரஸ்), கடந்த 5ம் தேதியன்று கருப்பு உடை அணிந்து மந்திர தந்திர வித்தைகளுக்கு முயன்றனர். 

காங்கிரஸ்

கருப்பு உடை அணிவதன் மூலம் அவநம்பிக்கை, விரக்தியில் இருந்து விடுபடலாம் என்ற அவர்களது எண்ணம்.  ஆனால் எத்தகைய தந்திரம் செய்தாலும்  மக்களின் நம்பிக்கையை அவர்கள் மீண்டும் பெற முயடிாது. மந்திர தந்திரங்களால் அவர்களது கெட்ட நாட்கள் முடிவுக்கு வரப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமரின் பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மோடி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதையும், உங்கள் கருப்பு செயல்களை மறைக்கவும் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பேசி நாட்டை தவறாக வழி நடத்துவதையும் நிறுத்துங்கள் பிரதமர் ஜி. மக்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.