நேஷனல் ஹெரால்டு வழக்கு.. அரசியல் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடக்கிறது.. மத்திய அரசை தாக்கிய சச்சின் பைலட்

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியதை குறிப்பிட்டு, அரசியல் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடக்கிறது என சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று   ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி நடத்தி திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மேலும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்த  காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பேரணி நடத்த முயன்ற தலைவர்களை காவல் துறை கைது செய்தது. 

எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியதை  சச்சின் பைலட் விமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அம்மாநில எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் காந்திய முறையிலும், அமைதியான முறையிலும் பேரணி நடத்த முயன்றோம். ஆனால் டெல்லியில் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) தவறாக பயன்படுத்துவதை மக்கள் பார்க்கிறார்கள்.  8 ஆண்டுகளுக்கு முடிக்கப்பட்ட வழக்குகள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மற்றும் அனைத்து தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ.க.

அரசியல் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடக்கிறது. நாட்டில் எவ்வளவோ முக்கியமான பிரச்சினைகள் இருந்தாலும் பல்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களின் குரலை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸூக்கு மறைக்க எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.