அதிமுகவுக்கு இரட்டை இலை , முதல் வெற்றி தந்த மாயத்தேவரின் மறைவு செய்தியறிந்து துயரமடைந்தேன் - ஓபி ரவீந்திரநாத் எம்.பி.

 
oo

அதிமுகவுக்கு இரட்டை இலையை தந்த, அக்கட்சிக்கு முதல் வெற்றியை  தந்த மாயத்தேவ காலமானார். அண்மையில் அவர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

 எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டில் அதிமுகவை தொடங்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார்.   அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார் .   அதனால் அன்று முதல் அதிமுகவின் சின்னம் ஆகிவிட்டது இரட்டை இலைச் சின்னம்.   அதன் பின்னரும் மாயத்தேவர் மூன்று முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

aa

 இந்த இரட்டை இலை சின்னம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் ஆதரவு என்பது தொண்டர்களின் நம்பிக்கை.   அந்த வகையில் ஓபிஎஸ் -இபிஎஸ் மோதலால்   சின்னம் முடக்கப்படலாம் என்ற பேச்சு இருக்கிறது.  அதிமுகவின் சின்னத்தை பெற்றுத்தந்த  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தை யாரும் கைப்பற்ற முடியாது என்றார்.   

ஓபிஎஸ் -இபிஎஸ் மோதலில் அவர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து  ஒட்டியிருந்த போஸ்டரில் ஓ. பன்னீர்செல்வம் படம் மட்டும் இருந்தது.   எடப்பாடி பழனிச்சாமியின் படம் இல்லை.   அந்த போஸ்டரில் இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்கதான் என்று தெரிவித்திருக்கிறார் மாயத்தேவர்.   மேலும் நாங்கதான்... எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம் ..எவனுக்கும் அஞ்சமாட்டோம் என்றும் சொல்லியிருக்கிறார்.   இது  எடப்பாடி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

maa

 அவர் காலமானதை அடுத்து, ஓபிஎஸ் மகனும், தேதி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.,  ‘’கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு முதன் முதலில் வெற்றி பெற்ற முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஐயா கே.மாயத்தேவர்  அவர்களின் மறைவு செய்தியறிந்து மிகுந்த துயரமடைந்தேன்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.