கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.. சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

மகாராஷ்டிரா கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த நவம்பர் மாதம் முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவரை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார், பாபாசாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம் என தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ்  குறித்த கவர்னர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்துக்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பகத் சிங் கோஷ்யாரி

மேலும், கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மராட்டிய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறியதாவது: கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விதானசபா கூட்டத்தொடர் டிசம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னும் பின்னும் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ்

சஞ்சய் ரவுத் அண்மையில் அவரை (பகத் சிங் கோஷ்யாரி) கவர்னராக  நாங்கள் கருத தயாராக இல்லை. அவர் ஒரு எளிமையான பா.ஜ.க. தொண்டர். கவர்னர் நடுநிலையாக இருக்க வேண்டும், தனது வார்த்தைகளிலும் நடத்தையிலும் கண்ணியம் காட்ட வேண்டும். ஆனால் நமது கவர்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே பற்றி பேசுகிறார். அவர் மகாராஷ்டிராவை கேலி செய்துள்ளார். என தெரிவித்தார். மகாராஷ்டிரா கவர்னர்  பி.எஸ்.கோஷ்யாரின் கருத்துக்கு ஆம் ஆத்மி மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.