தொண்டர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி கட்சியை அழிக்க பார்க்கிறார்கள் - சசிகலா

 
sasikala

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவருக்கு மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

People expect me to lead AIADMK': Sasikala reignites speculation of her  joining | The News Minute

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “பல அடக்குமுறைகளை அம்மாவும்  நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்துள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது, அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது, என்னை அம்மாவிடம் இருந்து பிரிக்க நிறையபேர் சூழ்ச்சிகளை செய்தார்கள், அதையெல்லாம் முறியடித்து சாதனை படைத்தேன், தொடர் வெற்றிகளை கண்ட கழகம் இன்று தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. இதுபோன்ற நிகழ்வு களைய வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், எந்த திமுக கட்சிக்கு எதிராக நம் தலைவர் கட்சி ஆரமித்தார்களோ அந்த திமுக ஆட்சியை கூட எதிர்க்க ஆளிலை, கழக தொண்டர்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தி வருகிறார்கள் கழக நிர்வாகிகள் கட்சியை மேலும் அழிவின் பாதைக்கு கொண்டு செல்கிறார்கள்.  உங்களின் பேராதரவை பார்க்கும்போது எனக்கு தரியம் வருகிறது.

தமிழகத்தில் புரட்சி தலைவர் மற்றும் அம்மாவ அவர்களின் ஆட்சி மட்டுமே சிறந்த ஆட்சியாக இருந்தது, தமிழக வரலாற்றிலேயே புரட்சி தலைவி ஆட்சிகாலத்தில் மட்டுமே மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் ஆகிவிட்டது அவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் அறிவிக்கப்படாத மின் வெட்டு அதிகரித்து வருகிறது, இந்த ஆட்சியாளர்களை பற்றி தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். அடுத்து விரைவில் அமைய போவது நமது கழக ஆட்சியே. வானூர் பகுதியில் கலை கல்லூரி பணிகள் துவங்கவில்லை. 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சி இன்னும் தரம் உயர்த்தவில்லை.பழமை வாய்ந்த இரும்பை கோவிலில் அரசு சார்பில் அன்னதானம் திட்டம் வழங்கவில்லை. இரும்பை கிராமத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சோலார் திட்டம் செயல்படுத்த வில்லை என இப்படி பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை நமது தலைமையிலான அரசு கண்டிப்பாக செய்து முடிக்கும்” என தெரிவித்தார்.