சாக்லெட் கொடுத்த சசிகலா!

 
sl

அதிமுக தலைமை எத்தனை முறை அறிவுறுத்தினாலும் கூட அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் அதிமுக கொடி கட்டிய காரில்தான் வலம் வருகிறார் சசிகலா.

  மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,  மதுரை வீரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் சசிகலா.  மாவட்டம்தோறும் ஆன்மீகப் பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா அந்தந்த மாவட்ட நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ls

 திருச்செந்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அதிமுக கொடி கட்டிய காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார் சசிகலா.   அங்கு சாமி தரிசனம் செய்தவர் அரை மணி நேரம் கோயிலில் இருந்த பின்னர்,  கிழக்கு கோபுரம் அருகே இருக்கும் அவரது குலதெய்வமான மதுரை வீரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

 அப்போது கோவிலில் தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் சசிகலாவிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.   இதன் பின்னர் காரில் இருந்தபடியே குழந்தைகள் பொதுமக்கள் ஆகியோருக்கு சாக்லேட்டுகளை கொடுத்தார் சசிகலா.