ஓபிஎஸ் ஆதரவாளர் தினகரனுடன் ரகசிய ஆலோசனை

 
an

ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான்,  அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரனை ரகசியமாக சந்தித்து பத்து நிமிடம் ஆலோசனை நடத்தி  உள்ளார் .  அதிமுகவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 தேனி மாவட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்றிருக்கிறார்.  அப்போது  தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் சென்ற பொழுது ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையது கான் தலைமையில் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.   

sa

 தினகரனுக்கு சால்வை அணிவித்த சையது தான்,  அவருடன் தனியாக ரகசியமாக பத்து நிமிடங்கள ஆலோசனை நடத்தி இருக்கிறார்.   ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான சையதுகானின் இந்த நடவடிக்கை தமிழக  அரசியல்  கவனத்தை பெற்றிருக்கிறது.  அதே நேரம் அதிமுகவிற்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் எடப்பாடி பழனிச்சாமி இவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இருவரும் இரு திசையில் இருந்து ஒருவர் ஒருவர் ஆதரவாளர்களை நீக்கியும் சேர்த்தும் வருகிறார்கள்.

s

 அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு கட்சியினரிடையே தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.  ஓபிஎஸ்சை இணைத்துக்கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பிடிவாதமாக இருப்பதால் ஓபிஎஸ்சும்- சசிகலாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் சார்ந்த சமூகமான தேவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  

இந்த நிலையில் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் சையது கான் தினகரனை வரவேற்று ,  அவரிடம்  பத்து நிமிடங்கள்  தனியாக ரகசியமாக பேசியது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   ஓ.  பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில்தான் சையது கான் தினகரனுக்கு வரவேற்பளித்தாரா என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது அதிமுகவில்.