10வது,12வது தேர்வில் பாஸ் ஆன மாஜி முதல்வருக்கு தண்டனை அறிவிப்பு

 
டெ

 அண்மையில்தான் பத்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா.  அவரை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று நேற்று அறிவித்த நீதிமன்றம் இன்று தண்டனை விவரத்தை வெளியிட இருக்கிறது . 

அரியானா மாநிலத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக பதவி வகித்து வந்தார்.  அவர் முதல்வராக பதவி வகித்து வந்த அந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக 2005 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.   இதுகுறித்து நேற்று நடந்த விசாரணையில் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என்று சிபிஐ  நீதிமன்ற சிறப்பு நீதிபதி விகாஷ்துல் அறிவித்தார்.   இதை அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறார் நீதிபதி விகாஸ் துல்.

ச

ஆசிரியர்கள் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இதற்காக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா,   கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தைத் தவிர மற்ற பாடங்களில் அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார்.   இதை அடுத்து ஹரியானா தேசிய திறந்தநிலை வாரியத்தின் கீழ் ப12ம்  வகுப்பு தேர்வுகளை எழுதினார்.  ஆனாலும் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவரது பிளஸ் டூமுடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன . பின்னர் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.  

 இதையடுத்து அவரது பிளஸ் டூ  தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  அதிலும் அவர் வெற்றி பெற்றார் .  பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் அவர் 100க்கு 88 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.   87 வயதான முதியவர் இந்த வயதிலும் பத்தாம் வகுப்பு,  இரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றதற்கு அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாது அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு மீண்டும் தண்டனை அளிக்கப்படுகிறது.

 ஓம் பிரகாஷ் சவுதாலா வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் தஸ்வி என்கிற திரைப்படம் வெளிவந்தது.   இந்த படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார்.  வயதான அரசியல்வாதி சிறையில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதை மையமாகக் கொண்டு இந்தக் கதையை அமைந்திருந்தது.