கட்சியில் நான் சொல்வதை கேட்பவர்களும் இருக்கிறார்கள்.. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர்..

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

கட்சிக்குள் நான் சொல்வதை கேட்பவர்களும் இருக்கிறார்கள் என்பதால் நானும் நம்பிக்கையாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சசி தரூர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று, அந்த கட்சியின் மூத்த  தலைவர்கள் சசி தரூர், மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கே.என்.திரிபாதி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இதில் கே.என். திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ்

இருப்பினும்,  வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு இன்னும் காலஅவகாசம் உள்ளதால், சசி தரூர் போட்டியிலிருந்து விலகக் கூடும் என தகவல் வெளியானது. ஆனால் சசி தரூர் போட்டியிலிருந்து விலக வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக உறுதியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது: மல்லிகார்ஜூன் கார்கேவின் நம்பிக்கை நன்றாக உள்ளது. நான் சொல்வதை கேட்பவர்களும் இருக்கிறார்கள் என்பதால் நானும் நம்பிக்கையாக இருக்கிறேன். பெரிய தலைவர்கள் இயல்பாகவே கட்சியில் மற்ற பெரிய தலைவர்களுடன் நிற்க முடியும். ஆனால் என்னுடன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தொண்டர்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

பெரிய தலைவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளையில் காங்கிரஸில் இளைஞர்களை கேட்க வேண்டிய நேரம் இது. கட்சியின் அமைப்பு கட்டமைப்பை மாற்றுவதற்கு நாங்கள் பாடுபடுவோம். கட்சி தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆக, அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.