பொருள் மோசமாக இருந்தால், எவ்வளவு நல்ல விற்பனையாளராக இருந்தாலும் சரி அதை விற்க முடியாது.. பா.ஜ.க.

 
காங்கிரஸ்

பொருள் மோசமாக இருந்தால், எவ்வளவு நல்ல விற்பனையாளராக இருந்தாலும் சரி அதை விற்க முடியாது என காங்கிரஸை பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது.

காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு கட்சியில் செய்ய வேண்டிய  மாற்றம் மற்றும் சீர்த்திருத்தங்கள் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த ஆலோசனைகளை காங்கிரஸ் ஏற்கவில்லை என தகவல். இதனால், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் காங்கிரஸ் முயற்சியை பா.ஜ.க. தலைவர்கள் கிண்டல் செய்தனர் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கூறுகையில், பொருள் மோசமாக இருந்தால், எவ்வளவு நல்ல விற்பனையாளராக இருந்தாலும் சரி அல்லது தன்னை நல்ல விற்பனையாளர் என்று கூறிக்கொண்டாலும் சரி, குடும்ப அரசியலின் தயாரிப்பை அதன் காலாவதி தேதியை தாண்டி விற்க முடியாது. 

ஷெஹ்சாத் பூனாவாலா

காங்கிரஸ் கட்சியின் நோக்கம், குடும்பத்தை காப்பாற்றுங்கள், கட்சியை காப்பாற்றுங்கள் அல்ல என்பதுதான். அதனால்தான் கட்சிக்குள் மாற்றம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளால் அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) குழப்பம் அடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பஸ்வான் கூறுகையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் விற்பனையாளர்களை பயன்படுத்துகின்றன.

பிரசாந்த் கிஷோர்

மேலும், அவர் (பிரசாந்த் கிஷோர்) ஒரு விற்பனையாளர். பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் பிற இடங்களில் அவர் தோல்வியடைந்து விட்டார், அவருடைய சாதனை பதிவை நீங்கள் பார்க்கலாம். காங்கிரஸூக்கு தலைமை பற்றாக்குறை உள்ளதா என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி. காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என தெரிவித்தார்.