சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பால் மராட்டியத்தில் பரபரப்பு

 
si


சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 மராட்டிய முதல்வர் ஏக்நாத் சிண்டே அணியும்,  முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணியும் கட்சியின் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று முறையீடு செய்தனர். இதனால் இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

se

 இந்த நிலையில் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது.   எதிர்வரும் அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் தனியாக சின்னங்களை தேர்வு செய்யவும் , தேர்தல் ஆணையம் இரு அணியினருக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.

 தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இலவச சின்னங்களின் பட்டியலில் இருந்து இரு குழுக்களுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.   இரு குளுக்களும் அக்டோபர் பத்தாம் தேதி மதியம் ஒரு மணிக்கு தற்போதைய தகவல்களை வழங்க வேண்டும் என்று  அறிவுறுத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம்.