பிரசாந்த் கிஷோர் இருந்த பதவியில் சுதீந்திர குல்கர்னி

 
p

பிரசாந்த் கிஷோர் இருந்த பதவியில் சுசீந்திர குல்கர்னி நியமிக்கப்பட்டிருக்கிறார்.   மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.   தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் அந்த பதவியில் இத்தனை காலம் இருந்து வந்தார்.  தற்போது அந்தப் பதவியில் சுசீந்திர குல்கர்னி  நியமிக்கப்பட்டிருக்கிறார்.

k

 சுசீந்திர குல்கர்னி மும்பை ஐஐடியில் படித்தவர்.  ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் அதன் பின்னர் பாஜகவில் சேர்ந்து வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்தவர்.   ஆத்வானிக்கும் ஆலோசகராக இருந்து  வந்தார்.   பின்னர் பாஜகவிலிருந்து விலகி விலகியிருந்தார். 

 அத்வானியின் அரசியல் அஸ்தமனத்திற்கு குல்கர்னி தான் காரணம் என்ற பேச்சு எழுந்தது.  அத்வானி துணை பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் சென்று ஜின்னாவை புகழ்ந்து தள்ளினார்.  சுசீந்திர குல்கர்னி சொன்னதால்தான் அத்வானி இப்படிப் பேசினார் என்று சொல்லப்படுகிறது.   இதனால் பாஜகவில் அத்வானிக்கு எதிர்ப்பு அதிகமாகி ஓரங்கட்டப்பட்டார் .

sk

மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்தவர் சுசீந்திர குல்கர்னி.   காங்கிரசையும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் மாநிலக் கட்சிகளையும் தன் வசப்படுத்த வேண்டும்  என்று மம்தா பானர்ஜிக்கு ஐடியா கொடுத்து வரும் குல்கர்னி,  மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளராக மம்தாவை  உருவாக்க பாடுபட்டு வருகிறார்.