விஜய் சம்மதத்துடன் திமுகவுக்கு ஆதரவு

 
vvvi

நடிகர் விஜய் சம்மதத்துடன் அவரது தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள்.

 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் களமிறங்கி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சிகளை எல்லாம் திரும்பி பார்க்க வைத்தது.    இந்த நிலையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முன்வந்து பல்வேறு மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  

b

 அதேநேரம் தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுத்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும்,   தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் இதை அறிவித்திருக்கிறார்.

 தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆதரவளித்து பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்து உள்ளனர்.   

 இதுகுறித்து பில்லா ஜெகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்று தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்  ஆலோசனை நடத்தப்பட்டது.  அதில் பெரும்பாலானோர் திமுகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.   அந்த அடிப்படையில்தான் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை முடிவு எடுத்திருக்கிறோம் .  பேரூராட்சி,   நகராட்சி,  மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.   விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமைக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த முடிவினை எடுத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.