தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே.. இப்ப அது எங்க போச்சு ? சூர்யா சிவா

 
d

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? என்று கேட்கும் சூர்யா சிவா,  தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே. இப்ப எங்க போச்சு அது? என்று கேட்கிறார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உட்பட அவரது மருமகன் சபரீசன் உள்பட திமுகவில் பலரும் கடவுள் பக்தி கொண்டவர்களாக உள்ளனர்.  இந்து கடவுள்களை அதிகம் வழிபட்டு  பூஜைகள் செய்து வருகின்றனர்.  ஆனால் திமுகவில் சிலர் இந்து கடவுளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு முதல்வர் மு. க. ஸ்டாலின் கூட விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வாழ்த்து சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

g

 இதில் தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் இந்து கடவுள்களையும் இந்து மத பூஜைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பூமி பூஜை போடப்பட்ட போது பூசாரியை விரட்டி அடித்து அங்கு இருந்து பூஜை செய்தவர்களையும் விரட்டியடித்து அதிகாரிகளை திட்டித் தீர்ந்தார்.  இந்து மத பூஜை செய்ய கூடாது என்று பெரிய ரகளை செய்தார்.  இதற்கு பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

 இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளத்தில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  இந்த கோவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயில்.   சிதலமடைந்த இக்கோயிலில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் இந்த கோயில் புனரமைக்க துர்கா ஸ்டாலின் தலைமையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வந்தன.

 திருப்பணிகள் முடிந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.   33 ஆக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை பிரம்மாண்டமாக நடந்தது.  காலையில் யாகசாலை பூஜையில் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடன்கள் மேளதாளங்களும் முழங்க புறப்பட்டன.   அப்போது முதல்வர் மனைவி துர்காஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ,ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி,  அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தார்கள். 


 பிறகு கோவில் விமான கலசம் ராஜகோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்க்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட ஆச்சார்யார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.   மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் அமைச்சர் மெய்ய நாதன், எம் எல் ஏக்கள் நிவேதா முருகன் , பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.   இந்த புகைப்படங்களை பகிர்ந்து,   இதுதான் பகுத்தறிவுக்கு வந்த சோதனை.  இதுதான் சுயமரியாதை கற்றுக் கொடுத்து இயக்கமா என்று நெட்டிசன்கள் கிண்டல் வருகின்றனர்.  

இந்நிலையில் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றிருக்கும் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூரிய சிவா இதைக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.   இது குறித்த வீடியோவையும் தனது பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.   அவர்,  ’’படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு.   தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே. இப்ப எங்க போச்சு அது . இதுதான் திராவிடமாடல்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.