வித்தவுட்டில் வந்தவர்கள் சலூன் கோச்சில் செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள் - பாஜக பதிலடி

 
sm

ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு சாமானியன் இன்று ஒட்டுமொத்த ரயில்வேயையே தனியாருக்கு விற்கும் நிலைக்கு உயர்ந்த உள்ளார் என்றால் அந்த மனிதரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளதானே வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.

rr


இதற்கு பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.  ’’ரயிலில் பயணம் செய்வதற்கு கட்டணமே செலுத்தாமல் (வித்தவுட்டில்) சென்ற சாமானியர்கள், அதே ரயிலில் சொகுசு 'சலூன் கோச்சில்' செல்லும் அளவிற்கு  உயர்ந்துள்ளார்கள் என்றால், அந்த சலூன் கோச்சில் அவர்களை பயணம் செய்ய வாய்ப்பளித்தவர்களை  பார்த்து வியக்கத்தானே வேண்டும்?’’என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

 அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்குச் சென்றார்.     சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார் . அவருடன் துர்க்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே. என் நேரு,  ஐ. பெரியசாமி போன்றவரும் ரயிலில் பயணம் செய்தனர் .

sr

முதல்வர் பயணித்த ரயில் பெட்டி சலூன் கோச் பெட்டி ஆகும்.   இது பல்வேறு  வசதிகளை கொண்டது .  குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்காக  ரயில்வே நிர்வாகம் இதை பிரத்தியேகமாக  உருவாக்கி இருக்கிறது.   கழிவறை வசதி, இரண்டு படுக்கையறைகள், உணவு அருந்தும் இடம், சோபா , சமையலறை, டிவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

 இந்த பெட்டி ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்பட்டுள்ளதால் பின்புறம் இருக்கும் கண்ணாடி ஜன்னல் வழியாக இயற்கை அழகை கண்டு ரசித்துக்கொண்டே பயணம் செய்யலாம்.  உயர் பதவியில் இருப்பவர்கள் தான் இதில் பயணம் செய்ய முடியும் என்பது அல்ல.   இதில் பயணம் செய்ய 2 லட்சம் ரூபாய் கட்டணம்.  இந்த கட்டணத்தை யார் செலுத்தினாலும் இதில் பயணிக்கலாம்.