அமைச்சர் உதயநிதியுடன் இணையும் மூன்று அதிகாரிகள்

 
மி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.

 தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின்  எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.  

அட்

 உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக  பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார் . அமைச்சர் மெய்ய நாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

உ

 புதிதாக பதவி அமைச்சர் பதவி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் உடன் மூன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்ற இருக்கிறார்கள் .  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளராக அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ் , சிறப்பு திட்ட அமலாக்க துணைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் , வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.

அ

 இந்த மூன்று துறைகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் மூன்று துறைகளின் செயலாளர்களாக இருக்கும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து இனி பணியாற்ற இருக்கிறார்கள்.