புறம்போக்குகளை திருமண மண்டபத்தில் வைத்து சீராட்டுவதா? முதல்வருக்கு பாஜக கேள்வி

 
sst

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுரி ஆதீனத்தை சந்தித்து விட்டு திரும்பி வந்திருக்கிறார்.   திரும்பி வரும் வழியில் மன்னம்பந்தல் என்கிற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு ஆளுநர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

mk

 தமிழகத்தில் ஆளுநர் சென்ற கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் தமிழகத்திலேயே  ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பது சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 இந்நிலையில் ஆளுநர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, கடுமையாக சாடியிருக்கிறார்.   ஆளுநரின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அரசாங்கம் அப்புறப்படுத்த வேண்டிய அரசாங்கம் என்று கடுமையாக தெரிவித்திருக்கிறார். 

 அவர் மேலும் ,  முதல்வர் வீட்டின் முன் நியாயம் கேட்டால் கைது செய்து சிறையில் அடைக்கும் தமிழக அரசு ஆளுநரின் வாகனத்தை கற்களாலும், கம்புகளாலும் தாக்கிய களவாணிகளை, புறம்போக்குகளை  திருமண மண்டபத்தில் வைத்து சீராட்டுவதா? என்று கடுமையான கண்டனத்தை முன் வைத்திருக்கிறார்.