நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு.. முதலில் என்கிட்ட வா மா - காயத்ரிக்கு திருச்சி சூர்யா சிவா சவால்

 
s

கட்சியை விட்டு வெளியேறிய பின்னரும் கூட அண்ணாமலையுடனான மோதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அந்த தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து தான் போட்டியிடப் போவதாகவும் சவால் விடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.

sa

 இது குறித்து கடந்த 15 ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் தளத்தில்,  ‘’ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன்.  நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?’’என்று பதிவிட்டு இருந்தார் காயத்ரி ரகுராம்.

 இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்திருக்கிறார்.  திருச்சி சூர்யா சிவாவின் ஆடியோ விவகாரத்தில் தான் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்குமான மோதல் முற்றியது.  அந்த ஆடியோ விவகாரத்தில்தான் சூர்யா சிவா பாஜகவை விட்டு வெளியேறினார். 

s

 இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக பதிலடி கொடுத்திருக்கிறார் சூர்யா சிவா . அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,   ‘’நீ கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் அண்ணன்  சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.   இல்லை என்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.  அதை விட்டுவிட்டு தேர்தலில் நிற்க விருப்பம் இல்லாதவரை வாருங்கள் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்வது சரியா?’’என்று கேட்கிறார்.

அவர் மேலும்,   ’’நான் இந்த விவாதத்திற்கு வருவது தேவையற்றது.  ஆனால் நீங்கள் கொடுக்கக்கூடிய பேட்டியில் எல்லா இடத்திலும் என் பெயரை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.   நீங்கள் என்னிடம் ஆடியோ இருக்கிறது வீடியோ இருக்கிறது என்று சொல்லித் தான் கட்சியை விட்டு விலகினீர்கள். ஆனால் கட்சியை விட்டு உங்களை விலக்கிய பிறகு எங்கே அந்த ஆடியோ வீடியோ என்று கேட்டால் என்னிடம் எதுமே கிடையாது.  அது திருச்சி சூர்யாவிடம் தான் இருக்கிறது என்று சொல்வது முதலில் சரியா?

ts

உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.  உங்களுக்கு திராணி தைரியம் இருந்தால் ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்.   நாம் இருவரும் நேரடியாக சந்திக்க?நான் தயார்.. நீங்கள் தயாரா? முதலில் என்கிட்ட வா மா’’என்கிறார்.