தயாநிதி.. அன்புமணி.. ஆங்..உதயநிதி! தடுமாறிய அமைச்சர் பொன்முடி

 
p

மீண்டும் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.   அடுத்த முதல்வர் உதயநிதி தான் என்பது திமுகவினர் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.   இப்போது கட்சியில் உதயநிதிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தான் அதிக முக்கியத்துவம்.  கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்து செல்வாக்கான மனிதராக இருக்கிறார் உதயநிதி . 

p

ஆனால்,  அவரின் பெயரையே  தயாநிதி, அன்புமணி  என்று மாற்றி மாற்றி தடுமாறி சொல்லிவிட்டு கடைசியாக உதயநிதி என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.  

 விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடந்திருக்கிறது.   இந்த முகாமை துவக்கி வைத்து பேசி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி .  அப்போது வருங்கால தமிழகமாக இருக்கும் தம்பியை குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன்.  அப்படி சிறப்பான உதயநிதி ... என்று சொல்ல  வேண்டிய பொன்முடி,   உதயநிதி என்ற பெயருக்கு பதிலாக தயாநிதி, அன்புமணி என்று பெயர்களை மாற்றி மாற்றி சொன்னவர் கடைசியாக பெயரைத் தவறாக சொல்லி விட்டோம் என்று சுதாரித்துக் கொண்டு,  மன்னிக்கவும் உதயநிதி என்று சொன்னார். 

u

 உதயநிதியின் பெயரையே அமைச்சர் மறந்து தயாநிதி,  அன்புமணி என்று தடுமாறுகிறாரே என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.