காயத்ரியை விரட்டியடித்த உதயநிதி?
யாரை வேண்டுமானாலும் கட்சியில் சேருங்க. ஆனா, அந்த பொம்பளை(காயத்ரி ரகுராம்) மட்டும் கட்சிக்கு வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்கிறார் திருச்சி சூர்யா சிவா.
தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டே தலைமையை கடுமையாக விமர்சித்தார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில்தான், முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீஷனுடன் சென்னையில் சோமர் செட் ஓட்டலில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சந்தித்து பேசினார் என்று காயத்ரி ரகுராம் மீது பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர். அதை அடுத்து துபாய் ஹோட்டலில் திமுகவினருடன் அடித்த கூத்துக்கள் என்று மேலும் காயத்ரி மீது குற்றம் சாற்றி அவரை ஓரங்கட்டி இருந்தனர். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும்.
இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து வெளியேறினார் காயத்ரி ரகும்ராம். அதன் பின்னர் அவர் திமுகவுக்கு ஆதரவான பல கருத்துக்களை பதிவிட்டு வந்தார் . இதனால் அவர் திமுகவில் சேரப் படுவதாக தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் திமுகவில் சேர நினைத்தவரை உதயநிதி ஸ்டாலின் சேர்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டதாக சொல்லி இருக்கிறார் சூர்யா.
’’உடன்பிறப்பு கட்சியில் சேர்த்துக்குறேன்னு சொன்னதுனால பந்தாவா ராஜினாமா பண்ணிட்டு போலாம்னு பிளான் பண்ண. திடீர்னு சின்னவரு யார வேணும்னாலும் சேர்த்துக்கோங்க. ஆனா அந்த பொம்பளை மட்டும் கட்சிக்கு வேண்டாம்னு சொல்லிட்டாராமே’’ என்று சொல்லும் சூர்யா சிவா, #அரசியல்அனாதை என்ற ஹேஷ்டேக்கினையும் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.