டேபிளுக்கு கீழேதான் பார்த்துக் கொண்டிருக்கிறார் - எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சாடிய உதயநிதி

 
uஉ

 எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து சென்றது டேபிளுக்கு கீழே பார்த்தவர் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.   உதயநிதி ஸ்டாலினின் அந்த பேச்சுக்கு திமுகவின் பெண்கள் தரப்பில் இருந்தே கடும் எதிர்ப்புகள் எழுந்தன.   இந்த நிலையில் மீண்டும் அவர் வரவிருக்கும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் அதையே பேசியிருக்கிறார் .  டேபிளுக்கு கீழே டேபிளுக்கு மேல் பார்த்தால் நான் தெரிந்து இருப்பேன்.   ஆனால் அவர் டேபிளுக்கு கீழே தேன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உட்

மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.   அப்போது அவர்,    சட்டமன்றம் முடக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார்.   நான் சவால் விடுகிறேன்.. தைரியமிருந்தால் முடக்கி பாருங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி,  மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் 200 இடங்களில் திமுக வெற்றி பெறும்.  அ திமுக படுதோல்வியை சந்திக்கும் என்றார்.

ஏ

மேலும் பேசிய உதயநிதி,   நான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காணாமல் போய்விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார்.  நான் காணாமல் போய் விட்டேனா?  என் மேல் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாசம் அதிகம்.    சமீப காலமாகவே என்னை அதிகமாக தேடுகிறார் என்று நக்கலாக பேசியவர்,    சட்டசபையில் அவருக்கு எதிரில் தான் அமர்ந்திருந்தேன்.   அவர் டேபிளுக்கு  மேல் பார்த்தால் நான் தெரிந்து இருப்பேன்.  ஆனால் அவர் டேபிளுக்கு கீழே தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று ஆபாசமாக பேசிய உதயநிதி ஸ்டாலின்,   குறைகள் மட்டுமே சுட்டிக் காட்டுகிறீர்கள்... இன்னும் நாலரை ஆண்டுகள் இருக்கிறது என்று  பேசினார்.