ராகுல் காந்தியின் யாத்திரையை நிறுத்தவே மத்திய அரசு கொரோனாவை வெளியிட்டுள்ளது.. உத்தவ் தாக்கரே சிவ சேனா குற்றச்சாட்டு

 
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்…..கொந்தளித்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சூடு பிடிக்கும் ஆரே விவகாரம்

ராகுல் காந்தியின் யாத்திரையை நிறுத்தவே மத்திய அரசு கொரோனாவை (செய்தியை) வெளியிட்டுள்ளதாக தெரிகிறது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் (பி.எஃப்.7) தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் சிலருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடியுங்கள் அல்லது நடைப்பயணத்தை தற்காலிகமாக ஒத்திவையுங்கள் என்று ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதினார். இதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது.

மன்சுக் மாண்டவியா

தற்போது, ராகுல் காந்தியின் யாத்திரையை நிறுத்தவே மத்திய அரசு கொரோனாவை (செய்தி) வெளியிட்டுள்ளதாக தெரிகிறது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றவும் அல்லது நடைப்பயணத்தை நிறுத்தவும்  என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பரிந்துரை செய்துள்ளார். ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 100 நாட்களை நிறைவு செய்து பெரிய அளவில் மக்கள் ஆதரவை பெற்று வருகிறார். 

ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன்

சட்டத்தினாலோ அல்லது சதித்திட்டத்தினாலோ அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை. எனவே மத்திய அரசு கோவிட்-19 வைரஸை வெளியிட்டதாக தெரிகிறது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் கூட்டத்தால் கோவிட் பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் சரியானது. ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன், கொரோனா பாதிப்பு இருந்தபோது, அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை குஜராத்துக்கு அழைத்து லட்சக்கணக்கான மக்களை குவித்து மரியாதை  செய்தவர் நீங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.