உசுப்பேத்திவிடும் அதிகாரிகள் -சங்கடத்தில் நெளிந்த அமைச்சர்!
அதிகாரிகளும், அந்த அமைச்சரும் செய்த வேலையால் அண்மையில் சட்டசபையில் ரொம்பவே தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு.
கோவை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றன. இவை எல்லாம் அந்த துறையின் அமைச்சர் நேருவுக்கு தெரியாமலேயே இருந்திருக்கின்றன. அதிகாரிகள்தான் இதைச்சொல்ல வேண்டும். கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்த்தெடுக்க மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாக போட்டிருப்பதால், அதிகாரிகள் அவரிடம் தான் எல்லாவற்றையும் சொல்லி வந்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கின்றன. டெண்டர் விவகாரம் நேருவுக்கு தெரியாமலேயே நடந்திருக்குது. இதனால்தான் தர்மசங்கடத்திற்கு ஆளாகிவிட்டாராம் நேரு. எதிர்க்கட்சியினர் சட்டசபையில் அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, சரியா பதில் சொல்ல முடியாம ரொம்பவே தர்மசங்கடத்தில் நெளிந்தாராம் நேரு.
இதனால் கடுப்பான நேரு, இதெல்லாம் ஏன் கவனத்திற்கு வரல? என்று கேட்டு விளாசி எடுத்திருக்கிறார். அதற்கு அதிகாரிகள், செந்தில்பாலாஜி பெயரைச்சொல்லி இருக்கிறார்கள்.
இதையடுத்து கோவைக்கே நேரில் சென்ற நேரு, வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளை கடிந்துகொண்டிருக்கிறார். அவர்களும் செந்தில்பாலாஜியை கைகாட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் , நேரு -செந்தில் பாலாஜிக்கு இடையே இருந்து ஏடாகூடமாக எதையாவது போட்டுக்கொடுத்து உசுப்பேத்தி விடுகிறார்களாம் அதிகாரிகள்.