பாஜகவில் உயரிய பதவி! வானதி சீனிவாசனை கண்டு வியக்கும் சீனியர்கள்!

 
va

தேசிய அளவில் பாஜகவில் முக்கிய பதவி வகித்து வரும் வானதி சீனிவாசனுக்கு பாஜகவின் உயரிய பதவி அளிக்கப்பட இருக்கிறது.   இதனால் வானதி சீனிவாசனைபார்த்து கட்சியினர் வியந்து வருகின்றனர்.  

 தமிழக பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற இருக்கிறது.   இது தொடர்பாக அண்மையில் பாஜக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது .  இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,  கோவை எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் டெல்லியில் முகாமிட்டு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வந்தார்.  

vs

 இதன் பின்னர் தேசிய அளவில் வானதி சீனிவாசனுக்கு முக்கிய பதவி கிடைக்கப் போகிறது என்கிறார்கள்.   பாஜகவின் சீனியர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பதவி வானதி சீனிவாசனுக்கு கிடைப்பதைக் கண்டு கட்சியினர் போகிறார்கள் கட்சியினர்.  

பாஜகவில் தேசிய அளவில் முக்கியமான முடிவுகளை எடுப்பது கட்சியின் உயர்மட்டக்குழு.   மத்திய பாராளுமன்ற குழு.   இந்த குழு தான் மாநில முதல்வர்களை நியமிப்பது , வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது என்று பல முக்கிய முடிவுகளை எடுக்கிறது.    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட 12 பேர் இந்த குழுவில் உள்ளனர். 

 இவர்கள் அனைவருமே பாஜகவின் மூத்த தலைவர்கள்.  இந்த குழுவில் மேலும் ஒருவரை நியமிக்க வேண்டும் அது பெண்மணியாக இருந்தால் சிறப்பு என்று மோடி, அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா ஆகியோர் முடிவெடுத்திருக்கிறார்கள் . அந்த பதவியை வானதி சீனிவாசனுக்கு அளிக்கப்பட இருக்கிறது என்றும்,   மூத்த தலைவர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இக்குழுவில் வானதி சீனிவாசனுக்கு இடம் கிடைப்பது பெரிய விஷயம் என்றும் வியந்து போகிறார்கள் கட்சியின் சீனியர் தலைவர்கள் பலரும்.

 இதனால் வானதி சீனிவாசன் விரைவில் வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றும்,  இதற்காக மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு உள்ள கட்சித் தொண்டர்களிடம் பேச வேண்டும் என்பதற்காக இந்தி கற்று வருகிறார் என்றும் பாஜக வட்டாரம் சொல்கிறது.