ஆற்காடு வீராசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வெங்கையா நாயுடு

 
அ

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியை  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

 திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த ஆற்காடு வீராசாமி, தற்போது வீட்டிலேயே  மருத்துவமனையில் போன்று தயார் செய்யப்பட்டு அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வு பெற்று வருகிறார்.

 ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடிவு எடுத்திருக்கிறார் .  இதை அடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள ஆற்காடு வீராசாமி இல்லத்திற்கு இன்று நேரில் சென்று  அவரை சந்தித்து நலம் விசாரித்தார் வெங்கையாநாயுடு.

வெ

  அப்போது ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியிடம்,   ஆற்காடு வீராசாமிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

 நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன்,  கே .என். நேரு உள்ளிட்டோர் ஆற்காடு வீராசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர் .   இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நலம் விசாரிப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், வெங்கையாநாயுடுவுடன் ஆற்காடு வீராசாமியின் சந்திப்பு குறித்து,  கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது,  நட்பின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் தந்தையை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்றார் என தெரிவித்தார்.