திமுகவை அதிரவைத்த வீடியோ - ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்

 
ர

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மணப்பாறை போலீசில் அரசு வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.   கருணாநிதி , முதல்வர் ஸ்டாலின் பற்றி ராஜேந்திர பாலாஜி அவதூறாக பேசிய வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டதாக அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

 மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி,  தற்போதைய தலைவரும் முதல்வரும் ஆன ஸ்டாலின் ஆகியோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து கட்டெறும்பு பிஜேபி என்ற டிவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது. 

ட்ந்

 இந்த பதிவை கண்டு கொதித்து எழுந்து திமுகவினர் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.  சம்பந்தப்பட்ட கட்டெறும்பு பிஜேபி என்கிற டுவிட்டர் கணக்கு முடக்க வேண்டும் என்று அளித்த புகாரில் சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீதும் மணப்பாறை போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

 ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது கருணாநிதி குறித்தும்,  ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.  இருவரின் பிறப்பு வளர்ப்பு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.   இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின்,  திமுக அடுத்து ஆட்சிக்கு வரும் ஆட்சிக்கு வந்ததும் முதலில் கைது செய்யப்பட போவது ராஜேந்திர பாலாஜி தான் என்று கடுப்பாக சொன்னார்.   அதே மாதிரி திமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜேந்திர பாலாஜியை முதலில் கைது செய்தது திமுக அரசு. 

 இந்த நிலையில் அன்று ராஜேந்திர பாலாஜி பேசிய வீடியோவை இன்று வைரல் ஆக்கிய விவகாரத்தில் மீண்டும் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.