டிசம்பர் மாதத்துக்குள் மம்தா பானர்ஜி கைது செய்யப்படலாம்.. மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் பகீர் தகவல்

 
மம்தா பானர்ஜி

டிசம்பர் மாதத்துக்குள் மம்தா பானர்ஜி கைது செய்யப்படலாம் என்று மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. மம்தாவின் மருமகனும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

சுகந்தா மஜூம்தார்

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்று மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகந்தா மஜூம்தார் கூறுகையில், டிசம்பர் மாதத்துக்குள் மம்தா பானர்ஜி கைது செய்யப்படலாம். 41 திரிணாமுல் காங்கிரஸ் மக்களின் பெயர்கள் உயர் (பா.ஜ.க.) தலைமையிடம் உள்ளது. டிசம்பரில் திரிணாமுல் காங்கிரஸ் கவிழும் என தெரிவித்தார்.

திலிப் கோஷ்

இதற்கிடையே பித்ரு பக்ஷத்தில் (மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினம்) துர்கா பூஜையை தொடங்கி வைத்ததே பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான திலிப் கோஷ் கூறுகையில், பித்ரு பக்ஷத்தில்  பூஜையை துவக்கி வைத்து துர்கா பூஜையின் புனிதத்தை அழிக்கிறார். மம்தா பானர்ஜியின் அனைத்து வேலைகளும் தவறு, அதனால்தான் துர்கா தேவியை வணங்கும் போது மந்திரம் உச்சரிப்பதில் தவறு ஏற்பட்டது என தெரிவித்தார்.