குஷ்புவுக்கு எதெல்லாம் எரியுமோ? அவர் பேச்சை பொருட்படுத்தக் கூடாது என்றுதான் இருந்தோம்.. திமுக கடும் விளாசல்
தாவல் திலகம் குஷ்பூவுக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்திருக்கிறது திமுக. திமுகவில் இணைந்திருந்த நடிகை குஷ்பு அதன் பின்னர் காங்கிரசுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் அண்மையில் குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த தால் குஷ்பூ திமுக மீது கடும் ஆத்திரத்தில் உள்ளார். இந்த நிலையில் அண்மையில் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திமுகவை ஒரு பிடி பிடித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை தெரிவித்து கட்டுரை வெளியிட்டு இருக்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி. அந்த கட்டுரையில், பாஜக சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தாவல் திலகம் குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை பற்றி பேசாமல் தனது வாய் துடுக்கை காட்டி இருக்கிறார்.
நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன தாவல் திலகம் என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும். அந்த அம்மையார் அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்கு தாவியதால் ‘தகவல் திலகம்’ என்ற பட்டம் பொருத்தமாக இருக்கும் அல்லவா. அந்த தாவல் திலகம் தான் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் முதல்வர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
ஜிஎஸ்டி போன்ற ஒழுங்கு முறைப்படுத்தாத வரி விதித்தாலும் விலைவாசி ஏறியது போதெல்லாம் எரியாத வயிறு, ஏழைகளை பாதிக்காத வகையில் பால் விலையை ஏற்றி பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளது கண்டு எரிகிறதா அதன் பெயர் வயிறு எரிவது அல்ல வயிற்று எரிச்சல்.
திமுக அரசு எந்த திட்டமிட்டாலும் ஏழை எளியவர்களை பாதிக்காத வகையில் போடுவதால் ஏற்பட்ட மன அரிப்பு. அம்மையார் தேசிய அளவில் அந்த கட்சியின் பொறுப்பில் உள்ளவர். அவருக்கும் அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டின் மின்கட்டணம் ஷாக் அடிக்கிறது. மற்ற மாநில கட்டணங்கள் ஷாக்கடிப்பதில்லை . பெங்களூரு நகரில் ஒருவர் இல்லத்தில் 148 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தினால் அவர் செலுத்திடும் மின் கட்டணம் 1395 ரூபாய் . பெங்களூரு உள்ளடங்கிய கர்நாடக மாநிலத்தை ஆண்டு கொண்டிருப்பது தாவல் திலகம் குஷ்பூ இப்போது குடியேறி இருக்கும் பாரதிய ஜனதா கட்சியாகும்.
அந்த அம்மையாரின் அருமைத் தலைவர் அண்ணாமலை பல ஆண்டுகாலம் வாழ்ந்த மாநிலம் ஆகும் பைக் தமிழ்நாட்டில் உள்ள இந்த கட்டண உயர்வை பார்த்தே குஷ்பூவுக்கு வயிறு எரிகிறது என்றால் பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள கட்டணத்தை பார்த்தால் எதெல்லாம் எரியுமோ?
மைக் கிடைத்து விட்டது என்பதால் எதையும் பேசி விடலாம் என்று தரம் தாழ்ந்து பேசினால், கொடுத்த வழியிலேயே அதற்கு பதிலும் வரும் என்பதை அரசியலில் புதிய வேடம் கட்டி உள்ள குஷ்பூ உணர வேண்டும். திமுகவின் பேச்சாளர் ஒருவர் இந்த அம்மையார் குறித்து பேசுகையில், குறிப்பிட்ட சில வார்த்தைகள் அம்மையார் மனதை புண்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட போது, அந்த பேச்சாளர் கண்டிக்கப்பட்டார் . அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க படிக்கப்பட்டு வருத்தமும் தெரிவித்தார் . கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலினும் மேடையில் இருந்து அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அங்கு பேசியுள்ளது பல நேரங்களில் வாய் நீளம் காட்டுவது பல சங்கடங்களை உருவாக்கி விடும் என்பதை அம்மையார் உணராது பேசுவது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக மாறிவிட்டது. ஓவராக சில காட்சிகளில் ரியாக்ட் செய்தால் அது விரசமாகிவிடும் என்பது சிறந்த நடிகையான அம்மையாருக்கு தெரியாமல் போனது ஏனோ?
அம்மையார் அரசியலில் மைலேஜ் எடுக்கும் நோக்கில் பேசியது இப்போது சேம் சைடு கோல் போல் ஆகிவிட்டது . அவரைப் பற்றி அதாவது இன்றைய பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பற்றி, அன்றைய பாஜக தேசிய செயலாளராக இருந்த எச். ராஜா பேசிய அருவருக்கத்தக்க பேச்சு மீண்டும் வலைத்தளங்களில் வைரலாக வளம் வரத் தொடங்கி விட்டன.
அப்பப்பா! அம்மையாரின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசி அவர் எப்படி எல்லாம் ஆனந்த பட்டிருக்கிறார் என்பது குஷ்பூ பார்வைக்கும் சென்று இருக்கும். ஒருவேளை அவரது கவனத்திற்கு சென்றிருக்காவிட்டால் அந்த பேச்சில் ஒரு சில பகுதிகளை தருகிறோம் . முடை நாற்றம் எடுக்கும் வகையில் நரகல் நடையில் பேசும் அந்த பேர்வழி பிஜேபியின் கடை நிலை பேச்சாளர் கூட, அல்ல மாநில அளவில் கூட அல்ல, தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வகித்த அந்த கட்சியினை வளர்த்துக் கொண்டிருப்பவர் அவரோடு சேர்ந்துதான் தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்ய குஷ்பூ புறப்பட்டு இருக்கிறார் .
குஷ்பு வேறு கட்சியில் இருந்தபோது எச்.ராஜா அளித்த பேட்டியில் , ஒரு அம்மா.. அந்த அம்மாவுக்கு பேசினா அதான் கல்யாணம் பண்ணிக்காமல் எப்படி வேண்டுமானாலும் குடித்தனம் பண்ணலாம்னு பேசி மாட்டிட்டாங்களே. அவங்க பேர் என்ன என பிராமண பாஷையில் வாயெல்லாம் பல் தெரிய அவர் கேட்க , அவர் முன்னிருந்த கூட்டத்தில் ஒரு சிலர், குஷ்பூ என கத்திட, ஆமா குஷ்பூ சுந்தர் என இவர் கிண்டல் அடித்து மகிழ்கிறார்.
குஷ்பூ ஏற்ற வேடங்களை கேலி செய்யும் வகையில் படங்களில் எவ்வளவு தூரம் வக்கிரங்கள், ஆபாசங்கள், அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணங்களாக எவ்வளவு கேவலமான படங்கள். இப்படி எல்லாம் குஷ்பு குடும்ப வாழ்க்கையையும், திரை வாழ்க்கையையும் வக்கிர புத்தியுடன் வர்ணித்த வீடியோக்கள் மீண்டும் பவனி வரத் தொடங்கி விட்டன.
திமுக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவித்தும் வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும் அவர் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச். ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்காக அமித்ஷாவும் பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா? இனியாவது கேட்பாரா? குஷ்பூ பேச்சை பொருட்படுத்தக் கூடாது என்று இருந்தோம், கொஞ்சம் அளவுக்கு மீறி வாய் நீளம் காட்டத் தொடங்கி விட்டதால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்காக சிறு விளக்கங்களை பதிவு செய்துள்ளோம். குஷ்பு புரிந்து கொண்டு நடப்பார் என எண்ணுகிறோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.