சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கு என்னடா வேலை?

 
ப்ட்

சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேலை? என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்று கோவை நகரமெங்கிலும் திமுகவினரின் ஒட்டியுள்ள போஸ்டர் வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாஜகவினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.   குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிடிஆருக்கு தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.  இதன்  உச்சமாக அண்மையில் செருப்பு வீச்சு சம்பவமும் நடந்தது.   மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும்  பிடிஆருக்கும்  தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது .

ட்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  பாஜகவினரை கடுமையாக சாடி வருகிறார் பிடிஆர்.

இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நிதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோரின் வருகைக்கு வரவேற்று கோவை பெரிய கடை வீதியில் திமுக இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   அங்கு மட்டுமல்லாது கோவை மாநகரில் லங்கா கார்னர் ,ரயில் நிலையம் ,கோட்டைமேடு என்று பல இடங்களிலும் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 அந்த போஸ்டரில்,  சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேலை ?என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.   இந்த போஸ்டர் கோவை மாநகர மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது .  இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

 இந்த போஸ்டர்களை பார்த்து எல்லாரும்,   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அதிகம் பேர் கருத்துக்கள்  பதிவிட்டு வருகின்றனர்.