கனிமொழி கூட்டத்தில் நடந்தது என்ன? - பிரச்சனையை பெரிதாக்காமல் தடுக்க நினைத்த எம்.எல்.ஏ

 
க்

 பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று சொல்லி அப்போதைக்கு பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு திமுகவினரையும் எச்சரித்து சமாளித்து வைத்திருந்தார் எம்எல்ஏ பிரபாகர ராஜா.  ஆனாலும் கனிமொழி கூட்டத்தில் நடந்த அந்த அநாகரீக சம்பவம் வெளியே பரவி விட்டது.  பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தி இருக்கிறார்.

 சென்னை விருகம்பாக்கத்தில் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே திமுக சார்பில் நேற்று முன்தினம் இரவில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்திருக்கிறது.   திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி பாண்டியன் இதில் பங்கேற்று இருக்கிறார்கள்.  விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பங்கேற்று இருக்கிறார்கள்.

கா

 நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது 129 ஆவது வட்ட இளைஞர் அணியை சேர்ந்த இரண்டு திமுகவினர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.  உடனே அந்த ரெண்டு பேரையும் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்ய முற்பட்ட போது பொதுக்கூட்டத்திற்கு வந்த கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 இதை கவனித்துவிட்ட மேடையில் இருந்த எம். எல். ஏ. பிரபாகர ராஜா பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று சொல்லி போலீசாரிடமும் கட்சியினரிடமும் சமாதானம் பேசி  பெண் காவலரிடம் சமாதானம் செய்த ரெண்டு பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார். 

 தமிழக அரசு பெண்கள் உரிமைகள் காப்பதுடன் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கனிமொழி பேசி வருகின்ற நிலையில்,  அவர் பங்கேற்ற கூட்டத்திலேயே பெண் காவலரிடம் திமுகவினர் அநாகரிகமான நடந்த சன் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கண்டனங்களும் வலுத்து வருகின்றன.


’’சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம். மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.  இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்’’என்று வலியுறுத்தி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.