நேற்று கரூர் இன்று தஞ்சை: வறுபடும் உதயநிதி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானவற்றை எதுவும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்பதால் தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் உதயநிதி ஸ்டாலினை மக்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
கரூரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், ஆயிரம் ரூபாய் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் கொடுப்பேன் என்றீர்களே? எப்போது கொடுப்பீர்கள்? என்று கேட்டதற்கு, இன்னும் நாலு வருஷம் இருக்கிறது. அதற்குள் கொடுத்து விடுவோம் என்று சொல்ல, ஆட்சி முடியும் போது கொடுக்கப் போகிறார்களா? என்று அங்கிருந்தவர்கள் கடுகடுத்தனர் . நகைக்கடன் தள்ளுபடி என்னாச்சு என்றும் கேள்வி எழுப்பினர்.
உதயநிதி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்ததுமே முதல் கையெழுத்து நீட்டை ஒழிப்பதுதான். நீட்டை ஒழிப்பதற்கான ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்று சொன்னவர் , நேற்றைய கரூர் பிரச்சாரத்தின்போது நீட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடுவது தான் அந்த ரகசியம் என்று சொல்ல, இது மக்களை மேலும் எரிச்சல் பட வைத்திருக்கிறது . இதுதானா ரகசியம்? இதற்குத்தானா இத்தனை பில்டப் என்று ஆவேசப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லுகுளம் பகுதியில், மாநகராட்சியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்போது, உதயநிதி ஸ்டாலினிடம் தங்கம்மாள் என்கிற பெண் தனக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று புகார் கூற, எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்க மனுவாக எழுதி கொடுக்கும்படி உதயநிதி மீண்டும் மீண்டும் அந்த பெண் கேள்வி எழுப்ப , உடனே சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அவர் பதில் ஏதும் சொல்ல முன்வராத தான் அதற்குள் மற்றொரு பெண் கவிதா நிதி உதவி வழங்கும்படி கோரிக்கை வைக்க , இப்படி அடுத்தடுத்த பெண்கள் ஒவ்வொரு கேள்வியாக எழுப்பி ,அதற்கு மேல் பிரச்சாரத்தை தொடரமுடியாமல் போனது .
இதனால் அங்கு பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு அடுத்த இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். கேள்வி கேட்ட பெண்களை திமுகவினர் சூழ்ந்ததால் பிரச்சார பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது . இதன் பின்னர் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், மூன்று குழந்தைகளுடன் சிரமப்படும் தாய்க்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னரே திமுகவினர் அவர்களை வெளியேற்றினர். நேற்று கரூரில் பிரச்சாரத்தில் கேள்வி கேட்டு மக்கள் கொந்தளிக்க தஞ்சாவூரிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் உதயநிதிக்கு போகும் இடங்களில் எல்லாம் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.