வெறுப்பேற்றிய திமுக -வெடித்த நிர்மலா சீதாராமன்
நான் பேசுறதை நீங்க கேட்டுத்தான் ஆகணும் என்று ஆவேசம் அடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மக்களவையில் விலைவாசி உயர்வு கொடுத்த வாதத்தின் போது தான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போது இந்த ஆவேசத்தை காட்டினார் .
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் .
இந்த நிலையில் மக்களவையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்தது. அப்போது விலைவாசி உயர்வினால் சாமானிய மக்கள் மிகவும் திண்டாடி வருகிறார்கள். படிக்கட்டு மக்களின் வாழ்க்கை மிகப் போராட்டமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கு தான் அரசு உதவி செய்கிறது. அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். அதானிக்குத்தான் மத்திய அரசு அதிகம் சலுவகைகள் வழங்குவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்பானி, அதானிக்கு மட்டும்தான் எல்லாம் செய்வதாக குற்றம் சாட்டுகிறீர்கள். உங்கள் தமிழகத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கின்றன. அதானியுடன் சேர்ந்து டேடா சென்டர் அமைக்கிறது தமிழக அரசு என்று பதிலடி கொடுத்தார்.
நிர்மலா சீதாராமன் பேசும் போது திமுக ,காங்கிரஸ் , மார்க்சிஸ்ட் எம்பிக்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியப்படியே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள் .இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன், ’’நீங்கள் பேசும் போது நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அதுவே நான் பேசும்போது நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்’’ என்றார் அதிரடியாக.
அதன் பின்னர் கனிமொழி எம்பி பேசியபோது, அவையில் பாஜக திறப்பினர் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்த போ, சற்று நேரத்திற்கு முன்னர் தான் உங்கள் அமைச்சர்கள் எழுந்து, நீங்கள் பேசும் போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம் . அதனால் நாங்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த வாக்குறுதியையும் நீங்கள் பறக்க விட்டால் எப்படி?என்ற கேள்வியை எழுப்பினார்.
விலைவாசி உயர்வு குறித்த வாதத்தால் நாடாளுமன்றத்தில் பரபரப்பும் சலசலப்பு நீடித்தது.