"கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியும் நிலையாக இருந்ததில்லை; சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி"- ஈபிஎஸ்

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியும் நிலையாக இருந்ததில்லை. அதிமுகவின் ஒரே நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியை இறுதி செய்வோம். அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். அதிமுகவை பொறுத்தவரை திமுக தான் எங்களுக்கு எதிரி. திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும்.
மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தோம். டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட்ட பின் அமைச்சரை சந்திக்க அவரின் அலுவலகத்திடம் நேரம் கிடைக்குமா? என கேட்டிருந்தோம். நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று சந்தித்தேன்” என்றார்.