எடப்பாடி பழனிசாமியின் முகத்திலேயே முழிக்காத செங்கோட்டையன்

 
எடப்பாடி பழனிசாமியின் முகத்திலேயே முழிக்காத செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண வரவேற்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

பிப்ரவரி 9.ம் தேதி அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்திய பாராட்டு விழாவை கே.ஏ செங்கோட்டையன் புறக்கணித்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி அந்த நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நிகழ்ச்சியை புறக்கணித்தது வெளிப்படையாக தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை கே.ஏ.செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். அதிமுக பொதுக்கூட்ட மேடைகளிலும் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அவரது ஆட்சியை குறித்தும் பேசுவதையும் தவிர்த்து வந்தார்.

எடப்படி

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகனின் திருமண வரவேற்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் முன்னதாகவே (வரவேற்பு தொடங்கும் முன்னரே) மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறப்பட்டார். இதேபோல் ராஜேந்திர பாலாஜி வருவதற்கு முன்பே மாபா பாண்டியராஜனும் வாழ்த்திச்சென்றார். வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது.  இன்று கொடிசியா வளாகத்தில் அவர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.