வைத்திலிங்கம் அறிவே இல்லாத முண்டம் - காமராஜ் விமர்சனம்
வைத்திலிங்கம் என்கிற கல்லை கட்டிக்கொண்டு ஓ. பன்னீர்செல்வம் கடலில் இறங்கி விட்டார், அதனால் தற்போது ஓபிஎஸ் அரசியல் அனாதையாகி விட்டார் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ வைத்திலிங்கம் என்கிற முண்டு கல்லை கட்டிக்கொண்டு ஓ. பன்னீர் செல்வம் கடலில் இறங்கி விட்டார். அவரது பேச்சை கேட்டு, ஓ.பன்னீர் செல்வம் தற்போது அரசியல் அனாதையாகி விட்டார். நான் சந்தித்த மனிதர்களில் அறிவே இல்லாத முண்டம் என்றால் அது வைத்திலிங்கம் தான்.
நான் வேறு வழியில்லாமல் சொல்லுகிறேன் நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்க தெம்பு உள்ளவன். வைத்திலிங்கம் எந்த தொகுதியில் நிற்பார்? எந்த சின்னத்தில் நிற்பார்? கத்தரிக்கோல் சின்னத்திலா நிற்பார்? வைத்திலிங்கத்திடம் அதிமுகவை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அந்த வெறியில் வைத்திலிங்கம் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். வைத்திலிங்கம் தொகுதி முழுவதும் ஈ.பி.எஸ் கையில் வந்து விட்டது. வீட்டு வேலைக்காரியெல்லாம் மகாராணியாகிவிட முடியாது என வி.கே.சசிகலாவை விமர்சித்தவர் முதலில் வைத்திலிங்கம் தான். தற்போது ஈபிஎஸ் எந்த தொகுதியில் என்னை நிற்க சொல்கிறார்களோ, அந்த தொகுதியில் நான் நிற்பேன்” என தெரிவித்தார்