அண்ணாமலை ஒரு புண்ணாக்கு! அவரால் கவுன்சிலர் கூட ஆக முடியாது- முன்னாள் எம்பி தாக்கு
அரக்கோணத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை புண்ணாக்கு என்றும் அதிமுகவின் வரலாறு தெரியாமல் பேசினால் அதிமுகவினர் சும்மா விட மாட்டார்கள் எனவும் அண்ணாமலையால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது என முன்னாள் எம்பி கோ. ஹரி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கூட்ரோடு பகுதியில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி மற்றும் முன்னாள் எம்பி கோ.ஹரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய கோ.ஹரி, “மக்களின் ஜீவாதாரண பிரச்னைக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான். காவேரி குடிநீர் பிரச்சினைக்காக 39 நாடாளுமன்ற உறுப்பினரும் புறக்கணித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை குறை கூறுவது என்பது அநாகரிமான செயல். அதிமுக தலைவர்கள் பற்றி அதன் வரலாற்றுப் பற்றி அண்ணாமலைக்கு தெரியுமா? அண்ணாமலை ஒரு புண்ணாக்கு, அவரால் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியாது. அதிமுகவின் கூட்டணி வைத்ததால் தான் பாஜக தற்பொழுது ஒரு சில இடங்களில் ஆவது வெற்றி பெற்றிருக்கிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியுறியதை தொடர்ந்து அதிமுகவினர் பாஜக குறித்து பல்வேறு பகுதிகளில் புகார் கூறி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.