”அரசியல் கிளைமேக்ஸ்! 2026 தேர்தல் வருவதற்குள் திமுக அம்போனு நிக்கக் கூடிய நிலை வரும்”- ஜெயக்குமார்

 
jayakumar

முதல்வருக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியவில்லை. சட்ட அமைச்சருக்குக்கூட தெரியாதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

jayakumar

தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஒரு சிறப்பான பரிசாக மின்சார கட்டண உயர்வை வழங்கியுள்ளது திமுக அரசு. அடுத்த பரிசாக பேருந்து கட்டண உயர்வு தயாராகி வருகிறது. போதாக்குறைக்கு தொழில்வரியில் இருந்து அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஆணவ படுகொலை, கொலைகள் அதிகரித்துள்ளன. முதல்வருக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியவில்லை. சட்ட அமைச்சருக்குக்கூட தெரியாதா? அவர் முன்விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியுமென கேள்வி கேட்கிறார். இப்படி கேட்க அவருக்கு வெட்கமில்லையா?

2026 தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளியே வர ஆரம்பிப்பார்கள். இப்போது அரசியல் கிலைமேட் எங்களுக்கு நன்றாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். வாயை மூடி மவுனமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட ஆரம்பித்துவிட்டனர். அடுத்து ஆதி திராவிடர்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும். 2026 தேர்தல் வருவதற்குள் திமுக அம்போனு நிக்கக் கூடிய நிலை வரும். மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. இந்த விடியா திமுக அரசு அதைக் கேட்க தவறிவிட்டது. மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் அரசாக திமுக அரசாக உள்ளது” என்றார்.