பரபரப்பாகும் அரசியல்களம்-டெல்லியில் அதிமுக தலைவர்கள் முகாம்

 
edappadi palanisamy sp velumani

முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி , எஸ்பி வேலுமணி ஆகியோர் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

kp munusamy

தமிழக எதிர் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றிருந்தார்.

மேலும் அவரை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி,  கேபி முனுசாமி ஆகியோர் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். மேலும்  டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.