பாஜக- அதிமுக கூட்டணியில் விரிசல்? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

 
eps

பாஜக கூட்டணியில் தொடர வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் முறையிட்டதாக தெரிகிறது. 

Image


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை சீராய்வு, மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய சர்ச்சை கருத்துகள் தொடர்பாக, மாவட்டச் செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் கூட்டாக அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Image

அப்போது பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக, எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. கண்டன தீர்மானத்திற்கு பாஜகவின் எதிர்வினையை பார்த்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் சர்ச்சை கருத்துக்கு, அதிமுக நிர்வாகிகள் சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்தனர்.

Image

முன்னதாக, அதிமுக அலுவலகம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் அண்ணாமலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சிலர் கூட்டணி விட்டு வெளியேற தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.