‘மானங்கெட்டன்’... ஓபிஎஸ்-ஐ விமர்சித்த வளர்மதி

 
வளர்மதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி, மானங்கெட்டவன் என ஓபிஎஸை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Pa Valarmathi, அ.தி.மு.க., மகளிரணி செயலராக பா.வளர்மதி நியமனம்: ஓ.பி.எஸ்., -  இ.பி.எஸ்., அறிவிப்பு - aiadmk appoints ex minister pa valarmathi as party  women secretary - Samayam Tamil

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு மகளிர் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மகளிர் அணி பூத் கமிட்டி அமைத்தல், 2024 தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

கூட்டத்தில் பேசிய வளர்மதி, “பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சை மேசையை தட்டி ரசிக்கிறார். திமுகவுடன் கூட்டு சேர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஓபிஎஸை எப்படி தலைவராக ஏற்று கொள்ள முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியும், மானங்கெட்டவன் என ஓபிஎஸை விமர்சித்தும் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.