முஸ்லிம்களுக்கு குழந்தை இல்லையென்றால், நாம் எப்படி ஆட்சி செய்வது?.. ஏ.ஐ.எம்.ஐ.எம். மூத்த தலைவர் பேச்சு
முஸ்லிம்களுக்கு குழந்தை இல்லையென்றால் நாம் எப்படி ஆட்சி செய்வது? என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குப்ரான் நூர். இவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் குப்ரான் நூர் பேசியிருப்பதாவது: முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை ஷரியா சட்டம் அனுமதிக்கிறது. நவீன சிந்தனையால் பரிந்துரைக்கப்படும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை முஸ்லிம்கள் பின்பற்றக் கூடாது.
தலித்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் குறைவாக குழந்தைகளை பெறுவதற்கு பயமுறுத்துகிறார்கள். இது ஷரியா சட்டத்துக்கு எதிரானது. நமக்கு குழந்தைகள் இல்லையென்றால், நாம் எப்படி ஆட்சி செய்வோம்? அசாதுதீன் ஓவைசி எப்படி பிரதமராக வருவார்? சவுகத் சாப் எப்படி முதல்வராக ஆவார்?. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இனை அவர் எப்போது பேசினார் என்று தெரியவில்லை.
வீடியோவில் பேசியிருப்பது தொடர்பாக அவரிடம் (குப்ரான் நூர்) செய்தியாளர்களிடம் கேட்டதற்கு, பொது வெளியில் எனது கருத்துக்களை நான் தெரவிக்கவில்லை. தனது சொந்த மக்கள் பேசியதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் குப்ரான் நூரின் வீடியோ பேச்சு குறித்து இதுவரை எந்த தலைவர்களும் கருத்து தெரிவிக்கவில்லை.