இனி எந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அல்லது அமைச்சரையும் கட்சியில் சேர்க்க மாட்டேன்... அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

இனி நான் எந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வையும் அல்லது அமைச்சரையும் எடுக்க (கட்சியில் சேர்க்க) மாட்டேன் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட 10 எம்.எல்.ஏக்கள்  பாஜகவில் இருந்து விலகியிருக்கின்றனர். அதில் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா  உள்ளிட்ட 7 பேர்  அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடியில் இணைந்தனர். இந்நிலையில் பா.ஜ.க.விலிருந்து வரும் எம்.எல்.ஏ.க்களை என் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க.

லக்னோவில் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை சொல்கிறேன்.இனி நான் எந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வையும் அல்லது அமைச்சரையும் எடுக்க (கட்சியில் சேர்க்க) மாட்டேன். அவர்கள் (பா.ஜ.க.) விரும்பினால் (தங்கள் தலைவர்களுக்கு) டிக்கெட் (போட்டியிடும் வாய்ப்பு) மறுக்கலாம் என்று தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் கோரக்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக யோகி ஆதித்யநாத் களம் இறங்குவது குறித்து அகிலேஷ் யாதவ் கிண்டலடித்தார்.

யோகி

அகிலேஷ் யாதவ் கூறுகையில், முன்பு எப்போதாவது அயோத்தியில் இருந்து போட்டியிடுவார் அல்லது மதுராவிலிருந்து போட்டியிடுவார் அல்லது பிரயாக்ராஜில் இருந்து போட்டியிடுவார் என்று சொன்னார்கள். இப்போது பாருங்கள். கோரக்பூருக்கு பா.ஜ.க. ஏற்கனவே அவரை (முதல்வர் யோகி ஆதித்யநாத்) அனுப்பி வைத்தது. எனக்கு அது பிடித்து இருக்கிறது. யோகி அங்கேயே இருக்க வேண்டும். அவர் அங்கிருந்து வர வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.