சசிகலா - டிடிவி இடையே நடக்கும் சண்டைக்கு பலியாக விரும்பவில்லை; கலையும் அமமுக டீம்

 
ttv sasikala

அமமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலச்சுந்தரம், கிழக்கு மாவட்டச் செயலாளர் அய்யனார் ஆகியோர் நேற்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

AMMK's TTV Dhinakaran backs Panneerselvam's comments on re-inducting  Sasikala into AIADMK | India News

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலசுந்தரம், "உண்மையான அதிமுகவில் இணைந்துள்ளேன், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவை பிளவுபடுத்திய ஓபிஎஸ்டன் டிடிவி தினகரன் நட்பு பாராட்டி வருகிறார், அதனால் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுவில் சேர்ந்தேன். பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வேன் என கூறிவந்த டிடிவி தினகரன் தனது கொள்கையிலிருந்து மாறுபட்டு செயல்படுகிறார்.

சசிகலா - டிடிவி தினகரன் இடையே நடக்கும் சண்டைக்கு நாங்கள் பலியாக விரும்பவில்லை. முதலில் அவர்களநு குடும்ப சண்டையை தீர்க்க வேண்டும், பின் கட்சியை ஒன்றிணைப்பது குறித்து பார்க்கலாம். சிகலா ஆதரவான தொலைக்காட்சியில் கூட டிடிவியின் செய்திகள் ஒளிபரப்புவது இல்லை. அதே போல, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என இந்த கட்சியை பிளவு படுத்தியவர் ஓபிஎஸ். அவருடன் டிடிவி கூட்டு வைத்துள்ளார். அமமுகவில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சினைகள் உள்ளது. என்னை போன்று பலர் வெளியில் பேச முடியாத அளவிற்கு இருக்கின்றனர்” என பரபரப்பு தகவல்களை கூறினார்.