நான் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது; பதவியை தூக்கி போட்டு வந்தவன்- அண்ணாமலை
மாநிலத்தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது, வெங்காயத்தை உரித்துப்பார்த்தால் ஒன்றுமே இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அதிமுக தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது. நான் பதவிக்காக அரசியலில் வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கி எறிந்துவிட்டு வந்தவன். நான் முழு நேர அரசியவாதி அல்ல, விவசாயி தான் எனது முழுநேர வேலை. மாநிலத்தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது, வெங்காயத்தை உரித்துப்பார்த்தால் ஒன்றுமே இருக்காது. அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. விவசாயி என்பது என் முதல் அடையாளம்...அதற்கு அப்புறம் தான் அரசியல்வாதி. விவசாயி என்னும் அடையாளத்தை நான் விட்டு கொடுக்க மாட்டேன்.
என்னை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டேன். அதிமுக கூட்டணியை முறித்ததால் பாஜகவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. கூட்டணி முறிவு குறித்து எந்த அறிக்கையும் கொடுக்கப்போவதில்லை. அறிக்கை அளிப்பதற்கு இது கம்பெனி கிடையாது தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும், பாஜக மீது திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம். வரும் நாடளுமன்றத் தேர்தலில், வலுவாக பல இடங்களில் வெற்றி பெறுவோம், அரசியலில் கட்டாயாப்படுத்தி நான் இல்லை. இருக்க வேண்டும் என இருக்கிறேன். என்னை விட்டு விட்டால் தோட்டத்திற்கு சென்று விவசாயம் பார்ப்பேன்” என்றார்.