ஈரோடு இடைத்தேர்தல்- பிரச்சார களத்தில் பதுங்கும் பாஜக

 
thennarasu erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்துள்ள போதிலும், பிரச்சார களத்தில் பாஜகவினரை அதிமுக தவிர்த்து வருகிறது. பாஜக கொடிகளும் பிரச்சாரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன.

bjp

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே சமரச முயற்சி மேற்கொண்ட பாஜக, சின்னம் தொடர்பான சிக்கல் தீர்ந்த்தும்  அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக அறிவித்தது. அதிமுக தேர்தல் பணிமனையில்  அடுத்தடுத்து பேனர்கள் மாற்றப்பட்டு இறுதியாக  மோடி, அண்ணாமலையின் படங்கள் இடம் பெற்றன. எனினும் அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற பெயரை மட்டுமே தேர்தலில் அதிமுக பயன்படுத்தி வருகிறது..

தேர்தல் பிரச்சாரத்தில் முதல் நாள் மட்டுமே தலை காட்டிய பாஜக நிர்வாகிகள் அதன் பின் ஒதுங்கி கொண்டனர். கடந்த சில தினங்களாக அதிமுக வேட்பாளர் தென்னரசு மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்பதில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் வந்து சென்றாலும் தங்களை பாஜகவினர் என அடையாளப்படுத்தி  கொள்ளும் வகையில் கொடிகளை பயன்படுத்துவதில்லை. 

கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தமாக நிர்வாகிகள் அதிமுக வேட்பாளருடன் திறந்த வாகனத்தில் ஒன்றாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமாக கொடி பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது போன்று பாஜகவினர் பிரச்சாரத்தில் பங்கேற்வில்லை. அக்கட்சி கொடிகளும் பிரச்சார களத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் மட்டுமன்றி தொகுதியில் முகாமிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பிரச்சாரங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. 

குறிப்பிட தக்க அளவு  சிறுபான்மையினர் ஓட்டுகள் இந்த தொகுதியில் இருப்பதால், அவர்களின் வாக்குகளை பெற அதிமுக, பாஜகவை தேர்தல் பிரச்சாரத்தில் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.