உதயநிதி மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகாரளிக்க உள்ளோம்- ஹெச்.ராஜா
உதயநிதி மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகாரளிக்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பாரதம் என பெயர் மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. டி.ஆர்.பாலுவிற்கு கருப்பு பணத்தை மாற்றுவதில்தான் சிக்கல் உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சனாதனம் குறித்து பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உதயநிதி மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகாரளிக்க உள்ளோம். சனாதன ஒழிப்பு மாநாட்டில் சேகர் பாபு உள்ளிட்ட இந்து விரோதிகள் கலந்து கொண்டது வன்மையாக கண்டிக்க தக்கது.
சீமானை தமிழன் என்று சொல்வது ஒவ்வொரு தமிழனுக்கும் அவமானம். சீமான் போன்ற நேர்மையற்ற நபரை அரசியல் வாழ்க்கையில் இருந்து துடைத்து தூக்கி எறியவேண்டும். சீமான், தான் குடியிருந்த வீட்டுக்கு 19 ஆண்டுகளாக வாடகை கூட தரவில்லை. வீரலெட்சுமி, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சீமான் ஒழுக்கக்கேடாக நடந்துக்கொண்டிருக்கிறார் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். சீமான் லட்சியத்திற்காக இருப்பவரல்ல, லட்சங்களுக்காக இருப்பவர் ” என்றார்.