பகவான் கிருஷ்ணர் மிகப்பெரிய அரசியல்வாதி.. நாங்கள் அவரிடம் அரசியலை கற்றுக்கொண்டோம்.. காங்கிரஸ் முதல்வர்

 
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

பகவான் கிருஷ்ணர் மிகப்பெரிய அரசியல்வாதி, நாங்கள் அவரிடம் அரசியலை கற்றுக் கொண்டோம் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வரும், உத்தர பிரதேச காங்கிரஸ் தேர்தல் பார்வையாளருமான பூபேஷ் பாகல், உத்தர பிரதேசம் மதுராவில் உள்ள பிஹாரி கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உண்மைக்காக போராடிய மிகப்பெரிய அரசியல்வாதி கிருஷ்ணர். நாங்கள் அனைவரும் அவரிடமிருந்து அரசியலை கற்றுக் கொண்டோம்.

பகவான் கிருஷ்ணர்

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வரும். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நாட்கள் கடந்து விட்டன. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் நிலைமை வலுவாக உள்ளது. பிரியங்கா காந்தியின் தலைமையில் இந்த அமைப்பு வலுவாகி உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்காக காங்கிரஸ் போராடியது.  காங்கிரஸூக்கு களத்தில் பெரும் ஆதரவு உள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுகிறோம். நாங்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்கிறோம். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.