“ஈபிஎஸ் பதவிக்காக நேற்று சசிகலா காலில் விழுந்தார்; இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் காலில் விழுந்துள்ளார்”
புதையலை பிரித்துக்கொள்ள அடித்துக்கொள்வதுபோல் அதிமுகவில் சண்டையிட்டு கொள்கின்றனர் என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக முதல்வர் மாணவர்கள் பெண்கள் முன்னேற்றதிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திவருகிறார். தொடர்ந்து பேசிய அவர், “15 நாட்களில் கல்லூரி துவங்கும்போது உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும், அதுபோல் மாநிலம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மகளீர் உரிமை தொகையும் உரிய நேரத்தில் வழங்கப்படும்” என்றார்,
அதனையடுத்து பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக வாரிய தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, “அதிமுகவில் தற்போது புதையலை பிரித்துக்கொள்பவர்கள் ஒருவரை ஓருவர் எப்படி திட்டம் தீட்டி கொன்று முழு புதையலை அடைய முற்படுவது போல் சண்டை நடைபெறுகிறது, எடப்பாடி பழனிச்சாமி பழைய பழனிச்சாமி இல்லை என்கிறார், பழைய பழனிச்சாமி ஒருவர் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வந்தார், இன்று ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் காலில் விழுந்து பதவியை அடையகிறார். இந்த நிலையில் திமுக தலைவரை ஏன் விமர்சனம் செய்யவேண்டும் இசைத்துறையில் சாதனை புரிந்த இளையராஜாவிற்கு இசைஞானி எனும் பட்டத்தை தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கினார், அது இன்றளவும் அவரின் பெயரின் முன்னாள் பெருமை சேர்ந்துள்ளது, ஆனால் பாரத பிரதமர் தாழ்தப்பட்டவர் என்பதற்காக எம்.பி பதவியை வழங்கியுள்ளார். அது அவரின் பெயரின் பின்னால் தான் இருக்கிறது” என பேசினார்.