“அதிமுக, பாமக, பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..” - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

 
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..

நேற்று முன் தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழக மக்களின் உரிமைக்காக அமித் ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே. மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ. திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார். அப்போது பாஜக, நம்ம, அப்பறம் பாமக என சிரித்துக் கொண்டே பேசி வந்த  அதிமுக எம்.எல்.ஏ. திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாங்க கூட்டணிங்க” என சொல்லி சென்றார். அதிமுகவினரின் அடுத்தடுத்த பேச்சு, நடவடிக்கைகள் பாஜகவுடன் கூட்டணி உறுதியாவதை காட்டுகின்றன.

அமித்ஷாவை இரும்பு மனிதர் என புகழ்ந்து ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஆனால் கூட்டணி பற்றி அமித்ஷாவிடம் பேசவே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். அதிமுக- பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி உறுதியாக எதுவும் கூறாத நிலையில், நிர்வாகிகளின் செயல் கூட்டணியை உறுதி செய்வதாக உள்ளது.