ஒற்றைத் தலைமை- நான் எடப்பாடி பழனிசாமிக்குதான் ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்

 
dindigul srinivasan

ஒற்றைத் தலைமைக்கு நான் எடப்பாடிக்கு தான் ஆதரவு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன்.

Another shocker from Dindigul Srinivasan

அதிமுகவில் இரண்டாம் நாளாக ஒற்றைத் தலைமை யார் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காலை முதலே முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ஆர்.பி உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு புறப்பட்டு சென்றனர். காரில் ஏறும்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஒற்றைத் தலைமைக்கு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு வருகிறது. என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் என உறுதியாக தெரிவித்து சென்றார்.

ஒற்றை தலைமைக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு  wait and see என்றும் தெரிவித்தார். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் வெளிப்படையாக அமைச்சர் ஆதரவு தெரிவித்திருப்பது ஒற்றை தலைமை இறுதி கட்டத்தை நோக்கி நகர்வதை காட்டியுள்ளது.